உலகம்

“அம்மாவின் மரணம் எனக்கு கொடுத்த அதிர்ச்சியினால் அதிகளவில் மது குடித்தேன்!” - இளவரசர் ஹாரி

“அம்மாவின் மரணம் எனக்கு கொடுத்த அதிர்ச்சியினால் அதிகளவில் மது குடித்தேன்!” - இளவரசர் ஹாரி

EllusamyKarthik

தனது அம்மா டயானாவின் மரணம் தனக்கு கொடுத்த அதிர்ச்சியின் காரணமாக மதுவுக்கு அடிமையாகி கிடந்தேன் என The Me You Can't See ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார் பிரிட்டன் அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகிய இளவரசர் ஹாரி. இவரது தாயார் டயானா 1997இல் கார் விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

“என்னால் அப்போது எந்த உதவியும் அம்மாவுக்கு செய்ய முடியாமல் போனதை எண்ணின் நான் வருந்தினேன். அம்மாவுக்கு நடந்த விபத்தை எண்ணி எனக்கு கோபம் வந்தது. ஒரு சிறுவனாக என் மீது அப்போது பட்ட கேமிராவின் பிளாஷ் வெளிச்சம் எனது குருதியை கொதிக்க செய்தது. அம்மாவின் மரணத்தை எண்ணி எண்ணி மது குடிக்கும் பழக்கத்திற்கு பழகினேன். சமயங்களில் போதை மருந்துகளை கூட எடுத்துக் கொண்டேன். ஏன் என்றால் எனக்குள் இருக்கும் உணர்ச்சிகளை அந்த பழக்கம் முகமூடி போட்டு மறைத்ததாக நான் கருதினேன். ஒரு கட்டத்தில் சுயக் கட்டுப்பாட்டுடன் குடிப்பதை கண்ட்ரோல் செய்தேன். ஆனால் வாரம் முழுவதும் குடிக்காமல் இருந்தாலும் அதை எல்லாம் ஒரே நாளில் குடித்து தீர்த்தேன்” என அவர் தெரிவித்துள்ளார். 

தற்போது இளவரசர் ஹாரி அவரது மனைவி மேகன் மார்க்கெல் உடன் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.