அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் காட்டுத் தீயால், சுமார் 2 ஆயிரம் வீடுகள் தீக்கிரையாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 27 ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதிகள் தீக்கிரையாகி இருப்பதால், காட்டுத் தீயை அணைப்பதற்காக ஆயிரத்து 700 தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
12 ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழியாக தண்ணீரை பீய்ச்சியடித்து, தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்னல் காரணமாக காய்ந்த புற்களில் தீப்பொறி ஏற்பட்டு, காட்டுத் தீ பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.