அமெரிக்காவில் வேலைவாய்ப்பில்லாதோர் எண்ணிக்கை 3 கோடியாக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் போடப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக தொழில்கள் முடங்கியுள்ளன. பல நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. இதனால் பலர் வேலையிழந்துள்ளனர். வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கான அரசின் பலன்களை பெற கடந்த மார்ச் மாதம் முதல் ஏராளமான அமெரிக்கர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த 25ஆம் தேதி வரை 3.3 கோடி பேர் தங்களுக்கு வேலையில்லை என பதிவு செய்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 30 லட்சம் பேர் வேலையிழந்ததாக தெரிவித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் மட்டும் வேலைவாய்பில்லாதோர் எண்ணிக்கை 14 சதவிகிதமாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு ஆளாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.