உலகம்

காதுகளை அகற்றிய ஜெர்மனி நபர் - காஸ்மெட்டிக் சர்ஜரிக்கு இப்படியா அடிமையாவது!!

காதுகளை அகற்றிய ஜெர்மனி நபர் - காஸ்மெட்டிக் சர்ஜரிக்கு இப்படியா அடிமையாவது!!

EllusamyKarthik

காஸ்மெட்டிக் சர்ஜரி விசித்திரமான பொழுதுபோக்குகளில் ஒன்றாகும். ஒரு சிலர் மூக்கு, வாய் மாதிரியான பகுதிகளை அழகுக்காக சர்ஜரி செய்து கொள்வதை கேள்வி பட்டிருப்போம். 

ஆனால் ஜெர்மனியை சேர்ந்த 39 வயதான சாண்ட்ரோ அறுவை சிகிச்சை மூலம் காதுகளை அகற்றிக் கொண்டுள்ளார். சமூக ஊடகங்களில் மிஸ்டர் ஸ்கல் ஃபேஸ் என்று அறியப்பட்ட சாண்ட்ரோ உடலை சர்ஜரி செய்து கொள்வதற்கு அடிமையானவர். அதற்காக இதுவரை சுமார் 5.8 லட்ச ரூபாயை செலவிட்டுள்ளார். 

அவரது நெற்றி, கையின் பின்புறம் மற்றும் நாக்கில் ஏற்படும் மாற்றங்களுக்கு பல நடைமுறைகளை மேற்கொண்டுள்ளார். 2019இல் காதுகளை அகற்றும்  சிகிச்சை செய்து கொண்டு அதனை ஒரு கூஜாவில் பத்திரப்படுத்தி வைத்துள்ளார். 

உடலில் அவர் மேற்கொண்ட மாற்றம் அவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்கிறார். 

"இந்த மாற்றம் என் வாழ்க்கையை பாதித்தது. ஆனால் நான் அதைப் பொருட்படுத்தவில்லை. சமுதாயத்தில் நான் ஒரு நபராக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். எனது தோற்றத்தினால் வேலை பெறுவதற்கான வாய்ப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் நிறைய நிறுவனங்கள் இன்னும் பழமைவாதமாக இருக்கின்றன. விமர்சனங்களைப் பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை” என்று சாண்ட்ரோ தெரிவித்துள்ளார்.

இதுவரை 17 முறை சர்ஜரி செய்து கொண்ட அவர் உடலில் பல இடங்களில் டேட்டூவும் போட்டுக்கொண்டுள்ளார்.