உலகம்

ஏழைகள் வீடு தேடி வரும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு

webteam

பிரேசில் நாட்டில் சூப்பர் மார்கெட்டுகளில் எஞ்சிய உணவுப் பொருட்களை வாங்கி கொண்டு வந்து மறுசுழற்சி செய்து ஏழை மக்களுக்கும் உணவளிக்கும் சமையல் கலைஞர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.  

பிரேசில் நாட்டை சேர்ந்த டேவிட் ஹெர்ட்ச், இத்தாலியின் மஸிமோ, இந்தியாவின் ககன் ஆனந்த் ஆகியோர் பிரபலமான சமையல் கலைஞர்கள் ஆவர். இவர்கள் மூவரும் இணைந்து வித்தியாசமான முறையில் ஏழை மக்களுக்கு உணவளித்து வருகின்றனர். பிரேசில் நாட்டில் சூப்பர் மார்கெட்டுகளில் எஞ்சிய உணவுப் பொருட்களை வாங்கி வந்து மறுசுழற்சி செய்து ஏழை மக்களுக்கும், வீடு இல்லாதவர்களுக்கும் இவர்கள் ருசியாக உணவுகளை வழங்கி வருகின்றனர். இவர்களின் இத்தகைய நற் செயலுக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மேலும் இதன் மூலம் ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட முடியாத ஏழை மக்கள் ருசியான உணவை சாப்பிட்டு வருவதினால் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக, இந்த பணியில் ஈடுப்பட்டுள்ள சமையல் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். அதே போல் இவர்கள் இந்தப் பணியை எந்தவித எதிர்ப்பார்பும் இன்றி செய்வதாக கூறியுள்ளனர்.