உலகம்

ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தல்: தோல்வி முகத்தில் ஆளுங்கட்சி

ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தல்: தோல்வி முகத்தில் ஆளுங்கட்சி

JustinDurai
ஜெர்மனியில் நடைபெற்ற தேர்தலில், தற்போதைய பிரதமர் ஆங்கெலா மெர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி தோல்வி முகத்தில் உள்ளது.
ஜெர்மனியில் மொத்தமுள்ள 299 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகளையும் எண்ணும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் வெளியாகியிருக்கும் முன்னணி நிலவரத்தின் படி, இடதுசாரி கட்சியான சமூக ஜனநாயக கட்சி 25.9 விழுக்காடு வாக்குகளுடன் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
பிரதமர் ஆங்கெலா மெர்கல் சார்ந்துள்ள கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 24.1 சதவிகித வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முடிவுகள் முழுமையாக வெளிவராத நிலையில், சமூக ஜனநாயக கட்சி ஆட்சி அமைப்பது உறுதி என்று அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான ஒலாஃப் ஷோல்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.