உலகம்

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை - பெல்ஜியத்தில் விரைவில் புதிய சட்டம் அமல்

JustinDurai

வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே பணி நாட்களாக இருக்கும் என்பதற்கான சட்ட வரைவை பெல்ஜியம் அரசு கொண்டு வந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு பிறகு தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்களில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டிய தருணம் வந்துவிட்டதாக பிரதமர் அலெக்சாண்டர் டீ க்ரூ தெரிவித்துள்ளார். இதன்படி வாரத்தில் 4 நாட்களில் 38 மணி நேரம் மட்டுமே பணி நேரமாக கொள்ள வேண்டும். மற்ற நாட்களில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு இந்த ஆண்டு மத்தியில் அமலுக்கு வரும் என தெரிகிறது. ஏற்கனவே ஸ்காட்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் நான்கு நாட்கள் மட்டுமே பணி என்பதை பரிசோதனை செய்துள்ளன.

இதையும் படிக்க: ``ரஷ்ய படை குறைப்புக்கான அறிகுறியே இல்லை”- நேட்டோ