அல்பேனியா நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெய்யும் தொடர் மழை, மக்களை பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறது.
அந்நாட்டில் கடந்த செவ்வாய் கிழமை 6 புள்ளி 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உலுக்கியது. இதில் அல்பேனியாவின் இரண்டாவது பெரிய நகரமான Durres கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 49 பேர் உயிரிழந்த நிலநடுக்கத்தைத்தொடர்ந்து அங்கு 600 க்கும் அதிகமான நில அதிர்வுகள் ஏற்பட்டுவருகின்றன.
இதன் காரணமாகவும், தொடர் மழையாலும் நிவாரணப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளுக்கு திரும்ப அஞ்சி முகாம்களிலேயே தங்கியிருக்கிறார்கள். இந்த நில நடுக்கத்தில் அல்பேனிய பிரதமரின் வருங்கால மருமகளும் இறந்தது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.