John Hopfield-Geoffrey Hinton X Page
உலகம்

2024 நோபல் பரிசு: இயற்பியல் துறைக்காக ‘John Hopfield - Geoffrey Hinton’ வென்றனர்!

PT WEB

2024-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு இயற்பியல் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இயந்திரக் கற்றலுக்கான அடித்தள கட்டமைப்பு முறையை இயற்பியல் மூலம் எளிதாக்கிய கண்டுபிடிப்புக்காக இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானி Hopfield, அமெரிக்காவின் Princeton பல்கலைக்கழகத்திலும், Hinton கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்திலும் தங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.

இயற்பியலுக்கான நோபல் பரிசு 11 மில்லியன் சுவீடிஷ் kronor, அதாவது ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பணம் மற்றும் விருதை உள்ளடக்கியதாகும்.