நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்தவருக்கு தாய்லாந்து நீதிமன்றம் 13,275 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்துள்ளது.
தாய்லாந்தில் தலைநகர் பாங்காங்கை சேர்ந்தவர் புதிட் கிட்டிகிராடிலோக் என்பவர் பல்வேறு நிதி நிறுவனங்கள் நடத்தி வந்தார். புதிட் நிறுவனத்தில் பணம் செலுத்துபவர்களுக்கு அதிக அளவில் பணத்தை திருப்பி தருவதாக விளம்பரம் செய்தார். அவரது விளம்பரத்தை நம்பி ஏராளமானவர்கள் பணம் செலுத்தினர். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் பணத்தை திரும்ப வழங்கவில்லை. அதன்மூலம் 40,000 பேரிடம் ரூ.1200 கோடி பணம் மோசடி செய்தார்.
இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்தப் புகாரின் பேரில், புதிட் மீது 2,653 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்ற, புதிட்-க்கு 13,275 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், புகார் செய்த 2,653 பேருக்கு ரூ.170 கோடி பணத்தைத் திருப்பி வழங்கவும் உத்தரவிட்டது.