உலகம்

விரைவுச் செய்திகள்: டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள் | ஜிஎஸ்டி வரிக்குறைப்பு | பிரெஞ்ச் ஓபன்

விரைவுச் செய்திகள்: டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள் | ஜிஎஸ்டி வரிக்குறைப்பு | பிரெஞ்ச் ஓபன்

Sinekadhara

தமிழகத்தில் நாளைமுதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கடையில் ஒரு நேரத்தில் 5 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஷேல் கேஸ் ஏலம் - விவசாயிகள் போராட்டம்: வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நெடுவாசல் அருகே ஷேல் கேஸ் எடுக்க ஏலம் விடப்பட்டது. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கரும் பூஞ்சைக்கான மருந்து தட்டுப்பாடு: தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். தேவையான அளவு மருந்துகளை ஒதுக்கீடு செய்யவேண்டும் என மத்திய அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 1 கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது. 45 வயதுக்கு மேற்பட்டோரில் 7 விழுக்காடு நபர்களுக்கு தடுப்பூசியின் இரு டோஸ்களும் போடப்பட்டுள்ளன.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம்: தடுப்பூசி செலுத்திக்கொள்ள மதுரை, தஞ்சை உள்ளிட்ட இடங்களில் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். கோவையில் மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம் பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு 81,000-க்கு கீழ் குறைந்தது: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 81 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது. ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பினர்.

17% தடுப்பூசி மட்டுமே போட்ட தனியார் மருத்துவமனைகள்: தனியார் மருத்துவமனைகள் பெற்ற சுமார் ஒன்றேகால் கோடி தடுப்பூசிகளில் 22 லட்சம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அரசு தடுப்பூசி முகாம்களில் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியுறும் சூழலில் இந்த நிலவரம் தெரியவந்துள்ளது.

ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் - பிரதமர்: சுகாதார கட்டமைப்பில் உலக நாடுகள் ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என செயல்பட வேண்டும் என ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கிறார்.

கொரோனா - மருந்துகள், சாதனங்களுக்கு வரிக்குறைப்பு: கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மருந்துகள், பல்ஸ் ஆக்சி மீட்டர் உள்ளிட்ட சாதனங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துக்கு வரி ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரிக்குறைப்பு போதுமானதல்ல: கொரோனா மருந்துகள், சாதனங்களுக்கு வரிக் குறைப்பு போதுமானதாக இல்லை என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார். பூஜ்ய வரி அல்லது பூஜ்யம் புள்ளி ஒரு சதவிகித வரி மட்டுமே விதிக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தியதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ரூ.100- ஐ நெருங்கும் பெட்ரோல் விலை: தமிழகத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியது. கொடைக்கானலில் ஒரு லிட்டர் 99 ரூபய் 95 காசுக்கு விற்பனையாகிறது.

ராஜஸ்தானில் டீசல் விலை சதமடித்தது: நாட்டிலேயே முதல்முறையாக டீசல் விலை ஒரு லிட்டருக்கு 100 ரூபாயைக் கடந்தது. பெட்ரோலைத் தொடர்ந்து ராஜஸ்தானில் டீசல் விலையும் சதமடித்தது.

மைதானத்தில் மயங்கி விழுந்த வீரர்: யூரோ கோப்பை கால்பந்து போட்டியின்போது, டென்மார்க் வீரர் எரிக்சன் நிலைகுலைந்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மைதானத்திலேயே முதலுதவி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் - இன்று பைனல்: செர்பிய நட்சத்திரம் ஜோகோவிச்சுடன் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் இன்று மோதுகின்றனர். இதனால் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

டாப் 50 வீரர், வீராங்கனைகள் வருவாய் ரூ.23,000 கோடி: உலகின் சிறந்த 50 விளையாட்டு நட்சத்திரங்களின் ஓராண்டு வருமானம் 23 ஆயிரம் கோடி ரூபாய் எனக் கூறப்பட்டுள்ளது. கொரோனா சூழலிலும் வருவாய் 16 சதவிகிதம் அதிகரித்தது.