ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதால் தலிபானைச் சேர்ந்த ஒருவர் அதிபர் மாளிகையில் உற்சாகமாக நடனமாடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாக கூறி தலிபான்கள் அதிபர் மாளிகையில் நுழைந்தனர். இதையடுத்து தலிபான் ஒருவர் அதிபர் மாளிகையில் உற்சாகமாக நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
அதேபோல், ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதையடுத்து, தலிபான்கள் அங்குள்ள பொழுதுபோக்கு பூங்காக்களில் உற்சாகமாக விளையாடிய காட்சி வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் அனைத்து இடங்களிலும் தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, அங்குள்ள பொழுதுபூங்காவிற்குள் சென்று தலிபான்கள் விளையாடினர்.
சிறுவர்கள் விளையாடும் குதிரை ராட்டினம், விளையாட்டு கார்களை ஓட்டி மகிழ்ந்தனர். இது நாள் வரை ஆயுதங்களுடன் இருந்தவர்கள், தற்போது குழந்தைகளாக மாறி விளையாடி வருகின்றனர்.