உலகம்

ஈராக் அமைச்சருடன் சுஷ்மா சந்திப்பு: கடத்தப்பட்ட 39 இந்தியர்களை மீட்பது குறித்து பேச்சு

ஈராக் அமைச்சருடன் சுஷ்மா சந்திப்பு: கடத்தப்பட்ட 39 இந்தியர்களை மீட்பது குறித்து பேச்சு

webteam

ஈராக்கில் 3 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட 39 இந்தியர்களை மீட்பது தொடர்பாக ஈராக் அமைச்சருடன் சுஷ்மா ஸ்வராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இன்று முதல் வரும் 28ம் தேதி வரை ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் அல் ஜஃபாரி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்தின் போது வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து இருதரப்பிலும் ஆலோசிக்கப்படவுள்ளது. இந்நிலையில் வெளி‌யுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டெல்லியில் அல்ஜஃபாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 3 ஆண்டுகளுக்கு முன் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களை மீட்பது தொடர்பாக பேசப்பட்டதாக தெரிகிறது. 

கடத்தப்பட்ட இந்தியர்கள், ஐ.எஸ் பிடியில் இருந்து மீட்கப்பட்ட மோசுல் நகரின் பாதுஷ் பகுதி சிறையில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களை மீட்பது தொடர்பாக ஈராக் வெளியுறவு அமைச்சர் அல் ஜஃபாரி புதிய தகவலுடன் இந்தியா வருவார் என சுஷ்மா ஸ்வராஜ் ஏற்கனவே நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.