இஸ்ரேல், ஈரான் எக்ஸ் தளம்
உலகம்

மத்திய கிழக்கில் போர் | இஸ்ரேலுக்கு இத்தனை நாடுகளா.. ஈரானுக்கு யார் யார் ஆதரவு?

ஈரான் - இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போரில் எந்தெந்த நாடுகள் யார் பக்கம் உள்ளன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Prakash J

இஸ்ரேல் - காஸா இடையேயான போரில், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவ்வமைப்பினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது.

இதன்காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரம் உலக நாடுகளை அச்சம்கொள்ள செய்திருக்கும் நிலையில், ஈரான் - இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போரில் எந்தெந்த நாடுகள் யார் பக்கம் உள்ளன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

மத்திய கிழக்கில் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் இஸ்ரேல் - ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரானஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் உறுதுணையாக இருந்துவருகின்றன. அந்த நாடுகள், காஸாவில் இஸ்ரேல் போர் தொடுத்த நாள் முதலாகவே நிதி மற்றும் ஆயுத உதவியைச் செய்து வருகின்றன. தற்போதும் உதவுவதாக உறுதியளித்துள்ளன. மேலும் இந்தப் பட்டியலில் சவூதி அரேபியா, ஜப்பான், ஜெர்மனி, ஜோர்டான் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன.

இதையும் படிக்க: வாரணாசி| கோயில்களில் இருந்து சாய் பாபா சிலைகளை அகற்றிய இந்துத்துவா அமைப்பினர்.. கிளம்பிய எதிர்ப்பு!

மறுபுறம் ஈரானுக்கு ஆதரவாய் லெபனான், ஏமன், சிரியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இஸ்ரேலுக்கு வலதுகரமாய் அமெரிக்கா, இங்கிலாந்து விளங்குவதால் அந்நாடுகளை எதிர்க்கும் ரஷ்யாவும், சீனாவும் ஈரானுக்கு ரகசியமாக உதவுவதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலைத் தீர்ப்பதில் கத்தார் தீவிரப் பங்காற்றி வருகிறது. இருப்பினும், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவுக்கு கத்தார் அடைக்கலம் கொடுத்தது இஸ்ரேலுக்குப் பிடிக்கவில்லை.

அதுபோல், எகிப்துக்கும் அதன் அண்டை நாடான இஸ்ரேலுக்கும் இடையிலான சமீபத்திய உறவில் திருப்தியில்லை. இஸ்ரேலிய படைகள் ஈரானின் எல்லைக் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதில் இருந்து அதன் உறவு சிதைந்துள்ளது. என்றாலும், எகிப்து எந்த நாட்டுக்கும் ஆதரவை தெரிவிக்கவில்லை. அதுபோல் இஸ்ரேலுடன் நல்ல உறவைக் கொண்டிருந்த துருக்கியும் தற்போது அந்த நாட்டுடன் இணக்கமாக இல்லை என்று கூறப்படுகிறது. என்றாலும் எகிப்தைப்போலவே துருக்கியும் யாருக்கும் ஆதரவளிக்காமல் உள்ளது.

இதையும் படிக்க: சமந்தா மணமுறிவு விவகாரம்| ”அந்தக் கருத்தில் இருந்து பின்வாங்கிவிட்டேன்; ஆனால்..“- தெலங்கானா அமைச்சர்