இந்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன் நேற்றிரவு வானில் ஜொலித்தது.
பூமிக்கு மிக அருகில் நிலா வரும்போது அதன் அளவும், பிரகாசமும் வழக்கத்தை விட அதிகமாக இருப்பது சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தென்பட்ட சூப்பர் மூன்களை தொடர்ந்து இந்த ஆண்டின் கடைசி சூப்பர்மூன் நேற்று தென்பட்டது.
இதனை பிளவர் மூன் அதாவது மலர் நிலா என்று வானியல் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். மே மாதம் மலரும் பூக்களின் நினைவில் இந்த பெயரால் சூப்பர் மூன் அழைக்கப்படுகிறது. சித்ரா பவுர்ணமியாக இந்தியாவில் குறிப்பிடப்பட்ட நேற்றைய இரவு, லண்டன் நகர வானில் பிரம்மாண்ட நிலா ஜொலித்த காட்சி. காண்போர் மனதை கொள்ளை கொண்டது.
இதைப்போல, கிரீஸ் நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான சான்டோரினியில் நிலவின் தோற்றம் அந்த இடத்தின் அழகை மேலும் அதிகரிக்கச் செய்தது. மத்திய கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் நிலவு அழகுற காணப்பட்டது