உலகம்

இந்தோனேஷிய போலீஸ் தலைமையகத்தில் தற்கொலை தாக்குதல்: பயங்கரவாதிகள் மீண்டும் அட்டாக்!

இந்தோனேஷிய போலீஸ் தலைமையகத்தில் தற்கொலை தாக்குதல்: பயங்கரவாதிகள் மீண்டும் அட்டாக்!

webteam

இந்தோனேஷியாவில் போலீஸ் தலைமையகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இது தற்கொலைப் படைத் தாக்குதல் எனக் கூறப்படுகிறது. 

இந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் சுரபயா. இங்கு போலீஸ் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 10 பேர் படுகாயமடைந்தனர். இது தற்கொலைப் படைத் தாக்குதல் என்று கூறப்படுகிறது. ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பயங்கரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டு வெடிக்கச் செய்தனர். இதில் தலைமையக கட்டிடம் சேதமடைந்தது. பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழப்புகள் பற்றி உடனடியாகத் தகவல் தெரியவில்லை. இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இதே பகுதியில் தேவாலயங்களில் நேற்று அடுத்தடுத்து பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு அடுத்த நாளே பயங்கரவாதிகள் இந்த தற்கொலை தாக்குதலை நடத்தியிருப்பது இந்தோனேஷியாவில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.