உலகம்

“ஐ லவ் யூ டார்லிங்” நெருப்புடன் ஒரு காதல் ! சண்டைப் பயிற்சி கலைஞரின் "லவ்" புரப்போஸ்

jagadeesh

இங்கிலாந்தில்சண்டைப்பயிற்சி நிபுணர் ஒருவர் தன் காதலியிடம் காதலை தெரிவிப்பதற்கு உடம்பில் தீயை மூட்டிக்கொண்ட அவரிடம் ஐ லவ் யூ என கூறியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டன்ட் நடிகரான ரிக்கி ஆஷ் செவிலியராக பணி புரியும் கட்ரினா டோப்சன் என்பரை கடந்த மார்ச் மாதம் ஆன்லைன் மூலம் சந்தித்து பேசியுள்ளார். அதன் பின்பு கொரோனா பாதிப்பு பொது முடக்கம் காரணமாக நேரில் இருவராலும் நேரில் சந்திக்க முடியாமல் போனது. இருவரும் அண்மையில் சந்திக்க தீர்மானித்தபோது ரிக்கி ஆஷ் வித்தியாசமான முறையில் கட்ரினாவிடம் தன் காதலை வெளிப்படுத்த நினைத்தார்.

இதனையடுத்து தன் முதுகில் தீயைப் பற்ற வைத்து கைகளில் மோதிரங்களுடன் கட்ரினாவிடம் மண்டியப்படி காதலை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வகையான ப்ரபோசலை சற்றும் எதிர்பாராத ப்ரபோசலை எதிர்பார்க்காது கட்ரினா, ரிக்கி ஆஷின் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார். ரிக்கி ஆஷக்கு 52 வயதாகிறது 27 ஆண்டுகளாக ஸ்ட்ன்ட் நடிகராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.