உலகம்

”உக்ரைன் போரை நிறுத்துங்கள்” - ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வேண்டுகோள்

”உக்ரைன் போரை நிறுத்துங்கள்” - ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வேண்டுகோள்

ஜா. ஜாக்சன் சிங்

உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு பிரபல ஹாலிவுட் நடிகரும் கலிஃபோர்னியா மாகாண முன்னாள் ஆளுநருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது கடந்த மாதம் 24-ம் தேதி படையெடுத்த ரஷ்யப் படைகள், மூன்று வாரங்களுக்கும் மேலாக அங்கு பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்களும், ராணுவத்தினரும் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கில் அங்கு கடந்த சில நாட்களாக ஏவுகணை தாக்குதலையும், வான் வழி தாக்குதலையும் ரஷ்யா முடுக்கி விட்டுள்ளது. உக்ரைன் நிலவரம் குறித்து அன்றாடம் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளும், காட்சிகளும் காண்பவர்களை கலங்கச் செய்வதாக இருக்கிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், "உக்ரைன் மீதான போர் முற்றிலும் அறிவற்ற செயல். இந்த போரில் ரஷ்யாவை எதிர்க்கும் உக்ரைன் வீரர்களை புதிய ஹீரோக்களாக உருவெடுத்துள்ளனர். ரஷ்யாதான் இந்தப் போரை முதலில் தொடங்கியது. எனவே இந்தப் போரை ரஷ்யா நிறுத்த வேண்டும்" என்றார்.