உலகம்

"ஸ்டான் சுவாமி மரணம் இந்திய மனித உரிமை வரலாற்றில் கறை" - ஐநா கருத்து

"ஸ்டான் சுவாமி மரணம் இந்திய மனித உரிமை வரலாற்றில் கறை" - ஐநா கருத்து

jagadeesh

ஸ்டான் சுவாமியின் மரணம் இந்திய மனித உரிமை வரலாற்றில் ஒரு கறையாக நீடிக்கும் என ஐநா நல்லிணக்க அதிகாரி தெரிவித்துள்ளார்

ஐநா நல்லிணக்க அதிகாரி மேரி லாலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உரிய ஆதாரம் இன்றி கைது செய்யப்பட்ட மனித உரிமைப் போராளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை ஸ்டான் சுவாமியின் மரணம் உலக நாடுகளுக்கு உணர்த்துவதாக தெரிவித்துள்ளார். மனித உரிமைகளை காக்கப் போராடியவரை பயங்கரவாதி போல் சித்தரித்தது, மன்னிக்கவே முடியாதது என்றும் மேரி லாலர் தெரிவித்துள்ளார்.

ஸ்டான் சுவாமி வன்முறையை தூண்டியதாக தொடரப்பட்ட குற்றச்சாட்டில் நீதிமன்றக் காவலில் இருந்த ஸ்டான் சுவாமி அண்மையில் காலமானார். காவலில் அவர் நடத்தப்பட்ட விதம் குறித்து சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தது. ஆனால் ஸ்டான் சுவாமி மீதான வழக்குகள் சட்டப்படியே நடந்ததாக மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது.