இந்தியாவின் அங்கமாக இருந்த கச்சத்தீவை காங்கிரஸ் அரசு இலங்கைக்கு தாரைவார்த்ததாகவும், அதற்கு திமுக துணை போனதாகவும் பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது.
மக்களவைத் தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கச்சத்தீவு பிரச்னை 50 ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், அதில் எந்த சர்ச்சையும் இல்லை என்றும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது யார் என்ற அரசியல் விவாதம்தான் இந்தியாவில் நடந்து வருகிறது. கச்சத்தீவை மீட்பது குறித்து யாரும் பேசவில்லை” என்றுகூறியுள்ளார்.