இலங்கையில் அதிகரித்துவரும் உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச கொண்டுவந்த அவசர நிலை கட்டுப்பாடுகளுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த கட்டுப்பாடுகளுக்கு ஆதரவாக 132 பேரும், எதிராக 51 பேரும் வாக்களித்தனர். அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டால் இலங்கையின் இராணுவ ஆட்சிக்கே அது வழிவகுக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்கட்சியினரும், சமூக செயற்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்த நிலையில் கட்டுப்பாடுகளுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
உணவு பொருட்களின் விலையை கட்டுபடுத்தும் நடவடிக்கையாக முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரை அத்யாவசிய சேவைகளின் ஆணையராக இலங்கை அரசு நியமித்தது. வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் கைவசமிருக்கும் உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அவற்றின் விலையை கட்டுப்படுத்தும் அதிகாரம் அத்யாவசிய சேவைகளின் ஆணையருக்கு அளிக்கப்பட்டுள்ளது.