உலகம்

இலங்கை குண்டுவெடிப்பு: முன்னாள் பாதுகாப்புத்துறை செயலர் கைது

இலங்கை குண்டுவெடிப்பு: முன்னாள் பாதுகாப்புத்துறை செயலர் கைது

webteam

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக பாதுகாப்புத்துறை முன்னாள் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 253 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றனர். உலக நாடுகளையே உலுக்கிய பயங்கரவாத தாக்குதலால் நிலைகுலைந்த இலங்கை, தற்போது தான் மெல்ல மீண்டு வருகிறது. தாக்குதலுக்குப் பிறகு அதிரடி சோதனைகள், பலத்த பாதுகாப்பு என இலங்கை அரசு தீவிர கண்காணிப்பிலேயே இருக்கிறது.

இலங்கை தாக்குதல் குறித்து தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது. சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குண்டுவெடிப்பு தொடர்பாக பாதுகாப்புத்துறை முன்னாள் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். 

ஹேமசிறி பெர்னாண்டோவை இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குண்டுவெடிப்பு தொடர்பாக நாட்டின்  பாதுகாப்புத்துறை முன்னாள் செயலரே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.