உலகம்

"முள்ளிவாய்க்காலுக்கான கர்மவினையை இன்று இலங்கை அனுபவிக்கிறது" - இலங்கை தமிழ் எம்.பி

"முள்ளிவாய்க்காலுக்கான கர்மவினையை இன்று இலங்கை அனுபவிக்கிறது" - இலங்கை தமிழ் எம்.பி

Veeramani

முள்ளிவாய்க்காலிலே கஞ்சிக்காக குழந்தைகள் வரிசையிலே நின்றார்கள், அப்போது குண்டுகளை வீசி அக்குழந்தைகளை கொன்றது இதே கோத்தபய ராஜபக்சே மற்றும் மகிந்த ராஜபக்சேவின் அரசாங்கம்தான், அதன் கர்மவினையை இன்று நீங்கள் அனுபவிக்கிறீர்கள் என்று இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்

இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க மக்கள் பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். திருகோணமலை, நுவரெலியா பகுதிகளில் பல மணிநேரம் காத்திருந்தும் சமையல் எரிவாயு கிடைக்காததால், காவல்துறையினருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சமைக்க வழியின்றி மக்கள் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.



இலங்கையில் சிங்கள மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை தமிழர்கள் 20 ஆண்டுகளாக எதிர்கொண்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய அவர், தற்போதுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியான சூழலிலும் இனப்பிரிவினைவாதத்தை இலங்கை அரசு கைவிடவில்லை என குற்றம்சாட்டினார்.



இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், " முள்ளிவாய்க்காலிலே கஞ்சிக்காக குழந்தைகள் வரிசையிலே நின்றார்கள், அப்போது குண்டுகளை வீசி அக்குழந்தைகள் கொல்லப்பட்டார்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பெண்கள் கொல்லப்பட்டார்கள். இந்த கேவலமான விஷயங்களையெல்லாம் செய்தது இலங்கை நாட்டினுடைய படைகளையெல்லாம் வைத்து இன்று இருக்கும் இதே கோத்தபய ராஜபக்சே மற்றும் மகிந்த ராஜபக்சேவின் அரசாங்கம்தான் செய்தது. அதன் கர்மவினையை இன்று நீங்கள் அனுபவிக்கிறீர்கள், அது உங்களை சூழ்ந்திருக்கிறது. ஆனால், அன்புக்குரிய சிங்கள மக்கள் துன்பப்படுவதை, தெருக்களில் நிற்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அவர்களுக்காக அனுதாபப்படுகிறோம்" என தெரிவித்தார்