6 பேர் கைது pt desk
உலகம்

இலங்கை: ஆழ்கடலில் சிக்கிய ரூ.165 கோடி மதிப்பிலான 66 கிலோ ஹெராயின் - 6 பேர் கைது

ரூ.165 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருள்களை ஆழ்கடல் படகில் கடத்தி வந்த ஆறு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: அ.ஆனந்தன்

இலங்கை கடற்படையினர் இலங்கையின் மேற்கு ஆழ்கடலில் நடத்திய சிறப்பு ரோந்து நடவடிக்கையின் போது, ரூ.165 கோடி மதிப்பிலான ஹெராயினுடன் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சந்தேக நபர்கள் ஹெராயின் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆழ்கடல் மீன்பிடிப் படகுடன் இலங்கை காலி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

ஹெராயின்

காலி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்ட படகு மேலதிக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போதே அதிலிருந்து ரூ.165 கோடி மதிப்பிலான 66 கிலோ 840 கிராம் ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இலங்கை மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்களிடம் கைப்பற்றப்பட்ட படகு மற்றும் போதைப் பொருளுடன் மேலதிக விசாரணைகளுக்காக போலீஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்தியாவில் வேதாரண்யம் கடல் மார்க்கமாக இலங்கை பகுதிக்கு ஹெராயின் கடத்தி வரப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும் முழுமையான விசாரணையில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்

ஹெராயின் பறிமுதல்

இந்தாண்டு இதுவரை ரூ.17,483 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கடற்படை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.