இலங்கையில் இருந்து தமிழகம் செல்வோரைக் கண்டறிய இலங்கை அரசு புலனாய்வுப் பிரிவினரை களமிறக்கியுள்ளது.
இலங்கை கடற்பரப்பின் வழியாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைவதை தடுக்க குற்றப்புலனாய்வுத் துறையின் மூன்று குழுக்களை இலங்கை வடமாகாணத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருகோணமலை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்வோரை விசாரணையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் மனித கடத்தல் புலனாய்வுப் பிரிவு மற்றும் கடல்சார் குற்றப்பிரிவு ஆகியவற்றின் குழுக்கள் இதற்காக களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இதுவரையில் சுமார் 80 பேர் சட்டவிரோதமான கடல் வழிகளில் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.