பட்டாம்பூச்சி PT
உலகம்

பறவைகள் கூட்டத்தை பார்த்திருப்பீங்க... பட்டாம்பூச்சி கூட்டத்தை பார்த்து இருக்கிறீர்களா? #Video

சீனாவின் தென்மேற்கு பகுதியில் லட்சக்கணகான பட்டாம்பூச்சிகள் ஒரே நேரத்தில் தோன்றிய காட்சி காண்போரை ஆச்சரியம் அடைய செய்துள்ளது.

PT

சீனாவின் தென்மேற்கு பகுதியில் லட்சக்கணகான பட்டாம்பூச்சிகள் ஒரே நேரத்தில் தோன்றிய காட்சி
காண்போரை ஆச்சரியம் அடைய செய்துள்ளது
. யுனான் மாகாணத்தில் பள்ளத்தாக்கு ஒன்றில் ஆண்டுதோறும்
நிகழும் இந்த அதிசயத்தை “Butterfly Explosion” என
ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும் இந்த கண்கவர் நிகழ்வு இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார், பட்டாம்பூச்சி வளர்ப்பாளர் ஜாவோ காண்டன். பொருத்தமான வெப்பநிலையும் ஈரப்பதமும் இருந்தால் மட்டுமே இந்த நிகழ்வு நடைபெறும் எனத் தெரிவித்த அவர், இம்முறை 1300 வகையான பட்டாம்பூச்சிகள் ஒரே நேரத்தில் தோன்றியுள்ளதாக குறிப்பிட்டார்.