உலகம்

விண்வெளி நிலைய இறுதிக் கட்டப் பணிகள்: 3 வீரர்களை விண்ணிற்கு அனுப்பியது சீனா!

விண்வெளி நிலைய இறுதிக் கட்டப் பணிகள்: 3 வீரர்களை விண்ணிற்கு அனுப்பியது சீனா!

ச. முத்துகிருஷ்ணன்

சீனா, விண்வெளியில் நிறுவி வரும் தனது சொந்த ஆய்வு நிலையத்தின் இறுதிப் பணிகளை நிறைவேற்றுவதற்காக மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ளது.

சீனா, விண்வெளியில் நிறுவி வரும் தனது தியாங்காங் ஆய்வு நிலையத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிக் கட்டப் பணிகளை மேற்கொள்ள ஷோ விண்கலம் மூலமாக, தியாங்காங் விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு மூன்று விண்வெளி வீரர்கள் சென்றுள்ளனர். கான்சு மாகாணத்தில் உள்ள ஜியுகுவான் ஏவுதளத்திலிருந்து ராக்கெட் மூலம் வீரர்கள் விண்ணில் பாய்ந்தனர்.

தற்போது நிறுவப்பட்டிருக்கும் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் அந்த விண்கலம் இணைக்கப்பட்டதும், அதில் இறங்கி அந்த நிலையத்தை முழுமையாக கட்டமைக்கும் பணியில் ஈடுபடவுள்ளனர். ஆறு மாதங்கள் இந்த இறுதி கட்டப் பணிகள் நடைபெறவுள்ளன. தியாங்காங் விண்வெளி ஆய்வு நிலைய கட்டமைப்புக்காக விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது குழு இதுவாகும்.