உலகம்

வடகொரியாவுடன் நட்புறவு வைக்க தென்கொரியா திட்டம்

வடகொரியாவுடன் நட்புறவு வைக்க தென்கொரியா திட்டம்

webteam

வடகொரியாவுடன் நட்புறவு வைப்பதன் மூலம் அணுசக்தி பிரச்னையை தீர்க்க முடியும் என தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் நட்பு நாடுகளுடனும், சர்வதேச சமூகத்துடனும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் மூன் ஜே இன் கேட்டுக்கொண்டார். சியோலில் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் நடந்த கூட்டத்தில் இதனை அவர் தெரிவித்தார். பிப்ரவரி மாதம் தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரிய வீரர்கள் பங்கேற்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கு தென்கொரிய விளையாட்டு அமைச்சகம் முழு ஒத்துழைப்பைத் தர வேண்டும் எனவும் மூன் கேட்டுக் கொண்டார். அத்துடன் வடகொரியாவுடன் நட்புறவு வைப்பதன் மூலம் அணுசக்தி பிரச்னையை தீர்க்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக கொரிய நாடுகளுக்கிடையே உறவுகளை மேம்படுத்துவதில், அன்னிய நாடுகளின் உதவியை எதிர்பார்ப்பதை தென்கொரியா கைவிடவேண்டும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பேசியது குறிப்பிடத்தக்கது.