உலகம்

தென்கொரியா: தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை

தென்கொரியா: தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை

webteam

தென் கொரியாவில் வரும் ஜூலை மாதம் முதல், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

தென்கொரியாவில் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 70 சதவீத முதியோர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ள நிலையில், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 70 சதவீதம் என்பது அந்நாட்டின் மக்கள் தொகையில் 52 மில்லியன் ஆகும். தற்போது அதில் 7.7 சதவீதத்தினர் மட்டுமே கொரோனாதடுப்பூசி போட்டுக்கொண்டதாக தெரிகிறது.

தென்கொரியாவில் நேற்று கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற அந்நாட்டு பிரதமர் கிம்
பூ-க்யூம் “வரும் ஜூன் மாதம் முதல், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட மக்கள் பெரிதளவில் கூட அனுமதிக்கப்படுவார்கள்.
நாட்டில் 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி சென்றடையும் பட்சத்தில், வரும் அக்டோபர் மாதம் அனைத்து
நடவடிக்கைகளும் தளர்த்தப்படும்” என்றார். தென்கொரியாவில் 65 முதல் 74 வரையிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்த 12,000 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக, தென் கொரியாவில் நேற்றுபுதிதாக 707 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு 137,682 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு கொரோனா தொற்றிற்கு 1,940 பேர் உயிரிழந்துள்ளனர்.