உலகம்

வீடற்றவர்களுக்கு உணவு வழங்கும் பேட்மேன்: குவியும் பாராட்டு..!

வீடற்றவர்களுக்கு உணவு வழங்கும் பேட்மேன்: குவியும் பாராட்டு..!

Sinekadhara

சாண்டியாகோவின் வீதிகளில் ஒருவர் பளபளப்பான பேட்மேன் உடையணிந்து, மாஸ்க் போட்டுக்கொண்டு வீடற்ற மக்களுக்கு டஜன் கணக்கில் சூடான உணவுகளை வழங்கி வருகிறார்.

கொரோனா தொற்றால் பல மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் தென் அமெரிக்கா, சிலி தலைநகர் சாண்டியாகோவில் பேட்மேன் உடையணிந்த ஒரு நபர் வீதிகளில் தங்கியிருக்கும் வீடற்றவர்களுக்கு உணவு வழங்குவதோடு, ஆறுதலாகவும் இருந்துவருகிறார். தன்னை அடையாளம் காட்டிக்கொள்வதை விரும்பவில்லை என்று கூறுகிறார்.

’’உங்களைச் சுற்றி பாருங்கள். பலருக்கும் உங்களுடைய சிறிது நேரம், சிறிது உணவு, தங்குமிடம் மற்றும் சில சமயங்களில் சில ஆறுதலான வார்த்தைகள் தேவைப்படும். அவற்றைப் பிறருக்குக் கொடுங்கள்’’ என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மாறுவேடத்தில் செல்வது பார்ப்பவர்களை உற்சாகப்படுத்துவதாக இருக்கிறது என்று கூறுகிறார்.

வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகள், சிலியின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதித்துள்ளது. வேலையின்மை 12%க்கு உயர்ந்துள்ளது. தலைநகர் சாண்டியாகோவில் பாதிபேரை மட்டும் வைத்து சில நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.