கொரானா கொடுத்த கொடை என்றுகூட சொல்லலாம். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாட்களில் இயற்கை தப்பித்ததோடு, மனிதர்களும் குற்றங்களில் இருந்து தப்பிப் பிழைத்துள்ளனர்.தென்னாப்பிரிக்காவில் ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டதால், பாதி க்ரைம் சம்பவங்கள் குறைந்துவிட்டதாக அந்நாட்டின் காவல்துறை அமைச்சர் ஃபெக்கி செல்லே தெரிவித்துள்ளார்.
அந்த நாட்களை அவர் க்ரைம் ஹாலிடே என்று வர்ணிக்கிறார். உலகிலேயே அதிக க்ரைம் நடக்கும் நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்றாக இருக்கிறது. அதேபோல கண்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட பாதிப் பேர் இங்குதான் இருக்கிறார்கள்.
ஊரடங்கின்போது மக்கள் வீட்டில் இருந்ததால், கொரோனா தடுக்கப்பட்டதுடன் குற்றங்களும் பெருமளவில் குறைந்துள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பாலியல் தாக்குதல்கள், கொலை உள்ளிட்ட குற்றங்கள் 40 சதவீதம் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.