போர் சூழலுக்கு மத்தியிலும் கிழக்கு உக்ரைன் பகுதியில் நடைபெற்ற ஈஸ்டர் ஆராதனையில் சிலர் பங்கேற்றனர்.
ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், பழமைவாத கிறிஸ்தவர்கள் ஒருவாரம் கழித்து தற்போது கொண்டாடி வருகின்றனர். அதன்படி, போரால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு உக்ரைனின் சபோரியிஷாவில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் ஆராதனையில் சிலர் பங்கேற்றனர். வழக்கமாக நள்ளிரவில் நடைபெறும் ஆராதனை, தாக்குதல் காரணமாக பகலில் நடைபெற்றது.
இதையும் படிக்கலாம்: ரஷ்யாவை இந்தியா நம்பியிருப்பதை நாங்கள் விரும்பவில்லை: அமெரிக்கா