உலகம்

சோமாலியாவில் பய‌ங்கர குண்டுவெடிப்பு: இதுவரை 276 பேர் உயிரிழப்பு

சோமாலியாவில் பய‌ங்கர குண்டுவெடிப்பு: இதுவரை 276 பேர் உயிரிழப்பு

webteam

சோமாலியாவில் நிகழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் இதுவரை 276 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் படுகா‌யமடைந்திருப்பதாகவும் அந்நாட்டின் தகவல்துறை அமைச்சர் ரெஹ்மான் உஸ்மான் தெரிவித்துள்ளார்.

சோமாலியா தலைநகர் மொகாதிஷூவில் அரசு கட்டடங்கள் மற்றும் ஹோட்டல்கள் அமைந்திரு‌க்கும் மக்கள் நடமாட்டம்‌ மிகுந்த பகுதியில், டிரக் லாரியில் வைக்கப்ப‌ட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இந்த குண்டுவெடிப்பில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமான உயிர் சேதம் சோமாலியாவில் ஏற்பட்டுள்ளது. இதில் ‌சுமார் 276 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் படுகா‌யமடைந்திருப்பதாகவும் அந்நாடு தகவல்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பலரின் ‌நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அ‌ஞ்சப்படுகிறது. இந்நிலையில் அந்நாட்டிற்கு தேவையான மருத்துவ உதவிகளை அண்டை ‌நாடுகளான கென்யாவு‌ம், துருக்கியும் அனுப்பி வைத்துள்ளன. கடந்த சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அல் ஷபாப் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று அரசுத் தரப்பினர் சந்தேகிக்கின்றனர்.