சமூக ஊடகம்  முகநூல்
உலகம்

சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை! எங்கே?

தெற்கு ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகம் பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

PT WEB

இன்றைய நவீன உலகில் சமூக ஊடகங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற அளவுக்கு, அது முக்கிய பங்கு வகிக்கிறது.

குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், மன வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் பெரும் தீங்கு விளைவிக்கிறது. எனவே முதல்முறையாக தெற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடங்கள் பயன்படுத்த தடை விதித்து முதல் மந்திரி பீட்டர் மலினஸ்காஸ் அறிவித்துள்ளார்.

அதன்படி சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த பெற்றோரின் ஒப்புதல் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடைமுறையை ஆராய உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான ஒரு குழுவையும் அரசாங்கம் நியமித்துள்ளது. இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.