உலகம்

விமானத்தை ரத்து செய்த பாம்பு

விமானத்தை ரத்து செய்த பாம்பு

webteam

விமானத்தில் பாம்பு இருந்ததால் எமிரேட்ஸ் விமானத்தின் சேவை ரத்து செய்யப்பட்டது.

மஸ்கட்டில் இருந்து துபாய்க்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட இருந்த ஈகே 0863 (EK0863) எமிரேட்ஸ் நிறுவனத்தின் சரக்குகள் வைக்கும் பகுதியில் பாம்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் பாம்பு இருப்பதைக் கண்டுபிடித்ததால், அந்த விமான சேவையை ரத்து செய்வதால எமிரேட்ஸ் நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. விமானம் முழுவதும் சோதனையிடப்பட்ட பின்னர் சேவை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதேபோல கடந்த 2016 நவம்பரில் மெக்சிகோவின் டொரோன் நகரில் இருந்து மெக்சிகோ நகரத்துக்கு இயக்கப்பட்ட ஏரோமெக்சிகோ விமானத்தில் நடுவானில் பயணிகள் உடமைகள் வைக்கும் பகுதியில் இருந்து பாம்பு ஒன்று இருந்தது கண்டு பயணிகள் அலறியது நினைவிருக்கலாம்.