உலகம்

சிங்கப்பூரில் குடிமக்களுக்கு சிறப்பு போனஸ்

சிங்கப்பூரில் குடிமக்களுக்கு சிறப்பு போனஸ்

webteam

சிங்கப்பூர் பட்ஜெட்டில் வருவாய் அதிகரித்துள்ளதால் குடிமக்களுக்கு சிறப்பு போனஸ் வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் ஹெங் ஸ்வீ கீட் சமீபத்தில் நிதி பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், அரசுக்கு இந்திய மதிப்பில் சுமார் 46 ஆயிரத்து 877 கோடி ருபாய் வருவாய் உபரியாக கிடைத்திருப்பதாக தெரிவித்தார். இதனால், சிங்கப்பூர் குடிமக்கள் அனைவருக்கும் போனஸ் வழங்கப்படும் என அவர் அறிவித்தார். 21 வயது நிரம்பிய குடிமகன் இந்த போனஸை பெற தகுதியானவர் ஆவார். குடிமக்களின் வருவாய்க்கு ஏற்ப இந்திய மதிப்பில் 4 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இதற்காக, இந்திய மதிப்பில் 34 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்தச் சிறப்பு போனஸ் தொகையால் சுமார் 27 லட்சம் குடிமக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.