உலகம்

கோடை காலத்தில் பிங்க் நிறமாக மாறும் ஏரி: ஆச்சரியத்தில் மக்கள்!

sharpana

ரஷ்யாவிலுள்ள சைபீரியாவில் உப்பு ஏரி ஒன்று கோடைக்காலத்தில் சூரியக்கதிர்கள் பட்டு பிங்க் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில்  மாறும் வீடியோ வைரலாகி வருகிறது.

ரஷ்யாவின் பெரும்பகுதியைக் கொண்டுள்ள சைபீரியாவில் குறைவான மக்களே வசிக்கிறார்கள். காரணம், அதன் குளிர்ந்த தன்மைதான். ஜனவரில் மைனஸ் 25 டிகிரி குளிர் அடிக்கும் என்றால் அதன் காலநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொள்ளலாம்.

ஆஸ்திரேலியா அளவிற்கு பரப்பளவைக் கொண்ட பெரிய சைபீரியாவில் பெரும்பாலும் பனி மலைகளும் பல்வேறு அதிசயங்களும் உலகின் பழமையான நன்னீர் ஏரியான பைக்கால் ஏரியும் உலகின் பெரிய ஆறுகளும் அமைந்துள்ளது.

பைக்கால் ஏரியின் பரப்பளவு மட்டுமே நெதர்லாந்து நாட்டிற்கு இணையானது. பல்வேறு அதிசயங்களை உள்ளடக்கிய சைபீரியாவில்தான் பர்லின்ஸ்கோய் அதிசய ஏரியும் அமைந்துள்ளது.

இந்த ஏரியில்தான் கோடை காலமான ஜூலை முதல் செப்டம்பர் வரை வானத்தில் சூரியனின் இளஞ்சிவப்பு நிற சூரியக் கதிர்கள் ஏரியில் பட்டு பிங்க் கலரில்  காட்சியளித்து மனதை கொள்ளைக் கொள்கிறது.

31 சதூர கிலோமீட்டர் கொண்ட இந்த ஏரியின் ஆழம் இரண்டு கிலோமீட்டருக்கு மேல் வெறும் இரண்டு அடிதான் என்பது இன்னும் வியக்க வைக்கிறது. அதிக அளவிளான உப்புகள் இந்த ஏரியில் உள்ளது என்பதால் இங்கு உடம்பில் காயங்கள் இருப்பவர்கள் வந்து கை கால்களை நனைத்துவிட்டுச் செல்கிறார்கள்.

உடனேயே சரியாவதாகவும் சொல்லப்படுகிறது. அதனாலேயே, ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்தளவிற்கு ரஷ்யாவிலேயே அதிக உப்புத்தன்மைக் கொண்ட ஏரி இதுதான். ஆர்டிக் கடலின் அருகில் அமைந்துள்ளது. ஏரியின் அருகிலேயே உப்பு தயாரிக்கப்பட்டு ரயிலில் எடுத்துச் செல்லப்பட்டு ரஷ்யா முழுக்க விநியோகம் செய்யப்படுகிறது.