எல் சல்வடார் நாட்டின் சான் சல்வடார் நகரில் 72 ஆவது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி நடைபெற்றது. அதன் இறுதிச்சுற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிலையில், நிகாரகுவா நாட்டின் ஷெய்நிஸ் பாலசியஸ், இந்த ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டின் மிஸ் யுனிவர்சான அமெரிக்காவைச் சேர்ந்த ரோனி கேப்ரியல் கிரீடத்தை சூட்டினார்.
83 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்வேதா ஷார்தாவும் பங்கேற்றிருந்தார். 20 பேர் கொண்ட தகுதிச் சுற்றுக்குள் நுழைந்த இந்திய அழகி, பட்டம் வெல்வதற்கான 3 பேரில் ஒருவராக தேர்வாகவில்லை.
மிஸ் யுனிவர்ஸ் 2023இல் தாய்லாந்தைச் சேர்ந்த அனடோனியா பார்சில்ட் இரண்டாவது இடம் பிடித்த நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மரியா வில்சன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
மிஸ் யுனிவர்ஸ் அழகிப் பட்டம் வென்ற ஷெய்நிஸ் பலாசியசுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.