உலகம்

ரஷ்யாவுடனான தொழில்களிலிருந்து விலகும் முன்னணி பெட்ரோல் நிறுவனம்

ரஷ்யாவுடனான தொழில்களிலிருந்து விலகும் முன்னணி பெட்ரோல் நிறுவனம்

கலிலுல்லா

ரஷ்யாவுக்கு மேலும் ஒரு பொருளாதார பின்னடைவாக மிகப்பெரும் எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான் ஷெல் ரஷ்யாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

ரஷ்ய பொதுத்துறை நிறுவனமான காஸ்ப்ராமுடனான கூட்டுறவை முறித்துக்கொள்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சக்காலின் -இரண்டு இயற்கை எரிவாயு திட்டத்தில் இருக்கும் 27.5 சதவிகித பங்கு உள்ளிட்ட அனைத்தையும் கைவிடுவதாக ஷெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவையும் ஜெர்மனியையும் இணைக்கும் நார்ட் ஸ்டீரிம் 2 எரிவாயு குழாய் திட்டத்திலிருந்து விலகுவதாக ஷெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே மற்றொரு எண்ணெய் நிறுவனமான பிபி ரஷ்யாவின் பொதுத்துறை நிறுவனமான ரோஸ்னெஃப்பில் உள்ள 20 சதவிகித பங்குகளை விற்கவுள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில் தற்போதெஉ ஷெல் நிறுவனமும் ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.