Sheikh Hasina file
உலகம்

வங்கதேச பாராளுமன்ற தேர்தல்: தொடர்ந்து 4 வது முறையாக ஆட்சியை பிடித்த அவாமி லீக் கட்சி!

வங்கதேசத்தில் தொடர்ந்து 4ஆவது முறையாக ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.

webteam

ஷேக் ஹசீனாவே வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆவார் என கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில் அது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சி அறிவித்திருந்தது. அத்துடன் 48 மணி நேர முழு அடைப்புக்கும் எதிர்க்கட்சி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

Sheikh Hasina

இந்த பரபரப்பான சூழலில் இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் மேற்பார்வையில், வங்கதேசத்தில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 40 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு முடித்தவுடன் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

மொத்தமுள்ள 300 நாடாளுமன்ற தொகுதிகளில் அவாமி லீக் கட்சி 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது. இதை தொடர்ந்து 5வது முறையாக ஷேக்ஹசீனா பிரதமர் அரியணையில் ஏற உள்ளார். தேர்தலில் 27 கட்சிகளை சேர்ந்த 1,500 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 436 பேர் சுயேட்சையாக போட்டியிட்டனர். கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹாசனும் வெற்றி பெற்று அரசியல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார்.