காசா போர் - ரமலான் File image
உலகம்

‘ரமலான் நேரம்... காசாவில் போரை நிறுத்துங்கள்’ - ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானம்!

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானின்போது காசாவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

PT WEB

காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பெண்கள், குழந்தைகள் உட்பட 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசாவில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அங்கு போர்நிறுத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தும் தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்டு பலமுறை அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் வீடோ மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ரமலான் மாதத்தின்போது போர் நிறுத்தத்தை அமல்படுத்த வலியுறுத்திய தீர்மானம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 10 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்டது.

போர் நிறுத்தத்துடன் தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி நடத்திய எதிர்பாராத தாக்குதலின் போது சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் எனவும் தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அமெரிக்கா கலந்துகொள்ளவில்லை.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான், ஏப்ரல் 9 ஆம் தேதி நிறைவடையும் நிலையில், காசாவில் போர் நிறுத்தம் செய்யக்கோரி ஐநா பாதுகாப்பு சபையில் முதல்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.