உலகம்

ஜீரோ டூ 200 மில்லியன் ஃபாலோயர்ஸ்.. யார் இந்த கேபி லேம்? சுவாரஸ்ய பின்னணி!

ஜீரோ டூ 200 மில்லியன் ஃபாலோயர்ஸ்.. யார் இந்த கேபி லேம்? சுவாரஸ்ய பின்னணி!

JananiGovindhan

கொரோனா ஊரடங்குக்கு பிறகு சமூக வலைதளங்கள் பயன்படுத்தும் அனைவருமே ஹீரோ, ஹீரோயின்களாகவே வலம் வருகிறார்கள். திரைத்துறையில் ஆர்டிஸ்ட்களாக இருக்காவிட்டாலும் மக்களிடையே ஒரு ஸ்டாராகவே பல சமூக வலைதள பிரபலங்கள் இருக்கிறார்கள்.

தங்களது கிரியேட்டிவிட்டியை வெறும் ஒரு நிமிடத்திற்குள் அடக்கி பல லட்சம், கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட பிரபலங்கள் சோசியல் மீடியாக்களால் உருவாகிவிட்டார்கள்.

அதில் உலகிலேயே முதன்மையானவர் என்றால் கேபி லேம்தான். செனகல் நாட்டைச் சேர்ந்த இந்த கேபியை (Khaby Lame) தெரியாதவர்களே இருந்திட முடியாது. இத்தாலியில் வசித்து வரும் இந்த கேபி, தன்னுடைய முக பாவனைகளை மட்டுமே வைத்து 200 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றிருக்கிறார். அதிகளவில் ஃபாலோ செய்யப்படும் உலகின் இரண்டாவது நபராகவும் அறியப்படுகிறார்.

இதுவரை தன்னுடைய எந்த வீடியோக்களிலும் பேசாமல் இருந்த கேபி முதல் முறையாக Nas daily மேற்கொண்ட நேர்காணலில் பேசியிருக்கிறார். அதில் டிக்டாக் இன்ஸ்டாகிராம் உலகத்துக்குள் வருவதற்கு முன் தான் என்ன செய்துக் கொண்டிருந்தார் என்பதை 22 வயதே ஆகும் கேபி கூறியிருக்கிறார்.

அதில், “சரியாக 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை சாமானிய ஆளாகவே கேபி இருந்திருக்கிறார். அதுவும் மாதம் 1000 டாலர் மட்டுமே சம்பளம் பெற்ற வெயிட்டராகவும், தொழிற்சாலை பணியாளராகவுமே இருந்திருக்கிறார். கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு கையில் இருந்த அந்த வேலையும் காலி.” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பிரபலமாக இருக்கும் கேபி லேமிற்கு முதல் முதலில் அவரது அப்பாவும், பக்கத்து வீட்டுக்காரரும்தான் அவர் வீடியோவின் நேயர்களாக இருந்தார்களாம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக தனக்கே உரிய பாணியில் லைஃப் ஹாக்ஸை வீடியோவாக பதிவிட்டு வந்திருக்கிறார்.

பேசாமலேயே வீடியோ பதிவிட்டு பிரபலமான கேபி லேம் முதல் முறையாக கேமிரா முன் “உங்களையும், உங்களை மகிழ்விப்பதையும் பிடித்திருக்கிறது” எனக் பேசியிருந்தது பார்வையாளர்களை திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும், தன்னுடைய வீடியோக்களின் தனித்துவம் என்ன எனக் கேட்ட போது “my video is simply and easy" எனக் கூறியுள்ளார் கேபி.

எவரது தூண்டுதலும், சார்பும் இல்லாமல் உங்களுக்கு என்ன தேவையோ அதனை நீங்களே செய்ய வேண்டும். உங்களது கனவை நிறைவேற்ற நீங்கள்தான் உழைக்க வேண்டும் என கேபி லேம் கூறியுள்ளார்.

ALSO READ: 



ஜீரோவில் தொடங்கிய கேபிக்கு டிக்டாக்கில் 137.7, இன்ஸ்டாவில் 76.7 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். இதுபோக ஃபேஸ்புக், யூடியூப் தளங்களிலும் பட்டையக்கிளப்பி வருகிறார்.

தற்போது Hugo Boss என்ற ஃபேஷன் நிறுவனத்தின் முகமாகவும் மாறியிருக்கும் கேபி உலகின் தலைச்சிறந்த திரைப்பட விழாவிற்கும், திரை உள்ளிட்ட பலத்துறை பிரபலங்களை சந்திக்கும் மிகப்பெரிய பிரபலமாகவே உருமாறியிருக்கிறார்.