உலகம்

சவுதி அரேபியாவில் கண்டறியப்பட்ட முதல் ஓமைக்ரான் பாதிப்பு

Veeramani

வளைகுடா நாடுகளில் முதன்முதலாக சவுதி அரேபியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வட ஆப்பிரிக்காவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபியவின் சுகாதார அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.  மேலும், " பாதிக்கப்பட்ட நபரின் தொடர்புகளையும் கண்டறிந்து பரிசோதனை நடத்தி வருகிறோம், பாதிக்கப்பட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், ஒமைக்ரான் தொற்றினை தடுக்க தேவையான சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என்று அவர் தெரிவித்தார்.

இதுவே மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் பதிவான முதல் ஓமைக்ரான் மாறுபாடு பாதிப்பு ஆகும். சவுதி அரேபியா அமைச்சகம் மக்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும், பயணிகள் அனைவரும் சுய தனிமை மற்றும் சோதனை விதிகளை மதிக்குமாறும் உத்தரவிட்டது.

மைக்ரான் பாதிப்பு முதன்முதலில் நவம்பர் 24 அன்று தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது, அங்கு நோய்த்தொற்றுகள் அதிகளவில் உயர்ந்துள்ளன, இது 20க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளன.