உலகம்

ஹஜ் பயணிகளுக்கு நோய் தொற்றா? - சவுதி அரசு விளக்கம்

webteam

20 லட்சம் பேர் ஹஜ் புனித யாத்திரைக்காக மெக்காவில் குவிந்துள்ள நிலையில், நோய் பரவும் அபாயம் ஏதும் ஏற்படவில்லை என சவுதி அரசு தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் ஐந்து நாள் ஹஜ் யாத்திரை கடந்த வாரம் தொடங்கியது. இதையொட்டி உலகம் முழுவதும் இருந்து சுமார் 20 லட்சம் பேர் ஹஜ் புனித யாத்திரைக்காக மெக்காவில் குவிந்து ‌உள்ளனர். தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலானவர்கள் மெக்காவில் உள்ள தற்காலிக முகாம்களிலேயே தங்கியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது. 

இந்நிலையில் மழை காரணமாக நோய் பரவும் ஆபத்து ஏதும் ஏற்படவில்லை என்றும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்திருப்பதாகவும் சவுதி சுகாதாரத்துறை அமைச்சர் தவ்ஃபிக் அல் ரபியா தெரிவித்துள்ளார். சுகாதாரத்தை பேணுவதற்காக சுமார் 30 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புனித யாத்திரைக்கும் வருபவர்களின் வசதிக்காக 25 மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன என சவுதி அரசு தெரிவித்துள்ளது.