உலகம்

ஹஜ் யாத்திரை ஜூலை 29-ஆம் தேதி தொடக்கம்: ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி?

ஹஜ் யாத்திரை ஜூலை 29-ஆம் தேதி தொடக்கம்: ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி?

webteam

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் மெக்காவுக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். தமிழகத்தில் இருந்தும் அரசு உதவியுடன் பலர் புனிதப் பயணம் செல்வார்கள். இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக ஆயிரம் பேருக்குக் குறைவானவர்களே புனிதப் பயணத்தில் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக பல கடுமையான  மருத்துவக் கட்டுப்பாடுகளுடன் புனிதப் பயணம் பற்றி முடிவெடுத்துள்ள சவுதி அரேபிய அரசு, ஜூலை 29 ஆம் தேதி ஹஜ் யாத்திரை தொடங்கப்படும் என அறிவித்துள்ளது. மெக்காவில் பல நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மதச் சடங்குகளில் வழக்கமாக 2.5 மில்லியன் மக்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டில் உயிருக்கு ஆபத்தான நோய்கள் இல்லாத 65 வயதுக்குக் குறைவானர்கள் மட்டுமே மெக்காவுக்குள் அனுமதிக்கப்படுவர் எனச் சொல்லப்படுகின்றது.

ஹஜ் யாத்திரையின் நேரம் என்பது நிலவின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிக் காலண்டர்படி திட்டமிடப்படுகிறது. கடந்த மாதத்தில், கொரோனாவை முன்வைத்து  சவுதி அரேபிய அரசு மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டும் புனிதப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்திருந்தது.