உலகம்

பல்வேறு நிறங்களில் காட்சியளிக்கும் உப்பு ஏரி

webteam

சீனாவின் ஷான்சி மாகாணத்திலுள்ள உப்பு ஏரி பல்வேறு நிறங்களில் காட்சியளிக்கிறது.

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள யான்செங்க் நகரத்தில் மிகப்பெரிய உப்பு ஏரி உள்ளது. இதில் உள்ள தண்ணீர் மிகவும் உவர்ப்பு தன்மை உடையது. கடந்த 400 ஆண்டுகளாக சீன மக்கள் இந்த ஏரியிலிருந்து உப்பை உற்பத்தி செய்து வருகின்றனர்.

இந்த ஏரியில் அளவுக்கு அதிகமாக உப்பு இருப்பதால் சீனாவின் டெட் சீ என அழைப்படுகிறது. உலகிலேயே அதிக உப்பு உள்ள ஏரிகளில் யான்செங்க் ஏரி மூன்றாவது இடத்தில் உள்ளது. வெப்பநிலை மாற்றம் மற்றும் நீருக்கடியில் காணப்படும் ‌பல வகையான பாசிகளே ஏரி பல்வேறு நிறங்களில் காட்சியளிக்க காரணம் என சொல்லப்படுகி‌றது.