உலகம்

ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக நாவல்னி வேட்புமனு

webteam

ரஷ்யாவில் அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வரும் அலெக்ஸி நாவல்னி அடுத்த ஆண்டு மார்ச்சில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ‌

ரஷ்யாவில் அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வரும் அலெக்ஸி நாவல்னிக்கு நாளுக்குள், நாள் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. இதனால் தேர்‌தலில் போட்டியிடுவதற்கு நாவல்னிக்குத் தடை விதிக்கப்பட்டது. சிறை சென்றதால்‌ அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகுதி அவருக்கு கிடையாது என தேர்தல் ஆணையம் காரணம் கூறியிருந்தது. இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த நாவல்னி, தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டால், தமது ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக தேர்தலைப் புறக்கணிப்பார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

இதைத் தொடர்ந்து அவரை வேட்பு மனுத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதித்தது. அதன் அடிப்படையில் தனது ஆதரவாளர்களுடன் சென்று அலெக்ஸி நாவல்னி வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அதே சமயம் அவரது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது 5 நாட்களுக்குப் பிறகே தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.