ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் முகநூல்
உலகம்

’உக்ரைனுடன் போரை நிறுத்துகிறேன்..பேச்சுவார்த்தைக்கும் ரெடி; ஆனால்..’ - புதின் போடும் மாஸ்டர் பிளான்!

உக்ரைனுடன் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார்.

PT WEB

உக்ரைனுடன் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் சூழலில், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்தி வருகிறது. ஜி-7 உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால், "ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெற வேண்டும், நேட்டோவில் சேருவதற்கான திட்டத்தை கைவிட வேண்டுமென ரஷ்யா அதிபர் நிபந்தனைகளை விதித்துள்ளார். நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் உடனடியாக போரை நிறுத்துவதுடன், அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட தயார்." எனவும் புதின் கூறியுள்ளார்.

உக்ரைனில் அமைதி ஏற்படுத்துவதற்காக சுவிட்சர்லாந்தில் உலகத் தலைவர்கள் சந்தித்து பேசவுள்ள நிலையில், புதின் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.