உலகம்

ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட நாவல்னிக்கு அனுமதி மறுப்பு

webteam

ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து அடுத்த ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் ‌நடத்தப் போவதாக எதிர்க்கட்சித் தலைவ‌ர் அலெக்ஸி நாவல்னி அறிவித்துள்ளார். வாக்காளர்கள் அனைவரும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் இந்தப் போராட்டத்தை நடத்தப் போவதாக அவர் அறிவித்துள்ளார். 

அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வரும் நாவல்னி அண்மையில் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவர் சிறை தண்டனை பெற்றவர் என்பதால் தேர்தலில் போட்டியிடுவதற்காக தகுதி அவருக்கு இல்லை என தெரிவித்து, ரஷ்ய தேர்தல் ஆணையம் அவரது வேட்பு மனுவை நிராகரித்தது.