உலகம்

கையெறி குண்டுடன் செல்ஃபி: ரஷ்ய வாலிபர் உடல் சிதறி பலி

கையெறி குண்டுடன் செல்ஃபி: ரஷ்ய வாலிபர் உடல் சிதறி பலி

webteam

ரஷ்யாவில் கையெறி குண்டுடன் செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபர் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார்.

சமீப காலமாக செல்ஃபி எடுக்க முயன்று பலர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். அந்த வரிசையில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் என்பவர் கையெறி குண்டுடன் செல்ஃபி எடுத்து நண்பர்களுக்கு அனுப்ப முயற்சி செய்துள்ளார். அவர், கையெறி குண்டில் உள்ள பாதுகாப்பு கொக்கியை எடுத்துவிட்டு செல்ஃபி எடுத்து நண்பர்களுக்கு அனுப்பிய நேரத்தில், குண்டு வெடித்துச் சிதறியது. இதில் அலெக்ஸாண்டர் உடல் சிதறி உயிரிழந்தார்.

இது குறித்து காவல்துறையினர் கூறும் போது, இறந்து போன அலெக்ஸாண்டருக்கு, கையெறி குண்டில் உள்ள பாதுகாப்புக் கொக்கியை எடுத்தால் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூட தெரியவில்லை. குண்டை தூக்கி எரிந்தால்தான் வெடிக்கும் என்று தவறாக நினைத்துள்ளார். அவரின் அறியாமையே அவரை கொன்று விட்டது என்று கூறினர்.